Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச மெசேஜ் தொல்லையால் கதறும் நடிகை!

Advertiesment
ஆபாச மெசேஜ் தொல்லையால் கதறும் நடிகை!
, வெள்ளி, 8 மார்ச் 2019 (12:04 IST)
இந்தியில்  காலண்டர் கேர்ள்ஸ், இஷ்க் ஃபார் எவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் ருஹி சிங்போங்கு படம் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.


 
ருஹி சிங்கின் செல்போன்  நம்பருக்கு இளைஞர் ஒருவர்  கடந்த ஒரு மாதமாக ஆபாசமான மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுபற்றி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என நொந்து போய் உள்ளார்.
 
இதுபற்றி ருஹி கூறியதாவது: அனுராக் கஷ்யப் என்பவர் எனக்கு அடிக்கடி செல்போனில் ஆபாச மெசேஜ், அனுப்பி வருகிறார். ஆரம்பத்தில் அந்த மெசேஜை நான் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தொடர்ந்து அதேபோல் செய்துவருகிறார். 
 
அவரது நம்பரை நான் பிளாக் செய்துவிட்டேன். ஆனாலும் புதுப்புது நம்பர்களிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்புகிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தேன். அவர்கள் இதுகுறித்து விசாரிப்பதாக சொன்னார்கள் ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை, மீண்டும் மீண்டும் அந்த நபர் ஆபாச மெசேஜ் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறார் அவரிடம் தொலைபேசியில் நானே பேசி, இதுபோல் செய்வது தவறு, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தேன். 
 
அவரோ, நானே ஒரு போலீஸ் அதிகாரிதான். நான் ஜெயிலுக்கு செல்ல தயார் உன்னால் முடிந்ததை செய் என்கிறார். பின்னர் அவர் அனுப்பிய மெசேஜில், நான் எப்போது எங்கு வந்து தன்னை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். என்னைப்பற்றிய நிறைய விஷயங்களை அந்த நபர் தெரிந்து வைத்திருக்கிறார். யாருடன் நான் பேசுகிறேன். 
 
யாரை சந்திக்கிறேன் என்பதை எல்லாம் பெயர் விபரங்களுடன் சொல்கிறார். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இதுபோன்ற நபர்களை சும்மாவிடக்கூடாது. அதனால் தான் இந்த விஷயங்களை பகிரங்கமாக சொல்கிறேன் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தடம் வசூல் இத்தனை கோடியா!! வெற்றிகண்ட அருண்விஜய்!!