Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அயன் மேனும், ஐரனி மேனும் –மோடியைக் கலாய்த்த நடிகை கஸ்தூரி

அயன் மேனும், ஐரனி மேனும் –மோடியைக் கலாய்த்த நடிகை கஸ்தூரி
, புதன், 31 அக்டோபர் 2018 (12:46 IST)
இந்திய நாட்டை ஒன்றினைத்த சர்தார் வல்லபாய் படேலின் 182 அடி உயரச் சிலையை இன்று இந்தியப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

சர்தார் வல்லபாய் படேல் சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவை வடிவமைத்ததில் முக்கியப் பங்காற்றியவர். இந்தியாவோடு இணைய மறுத்த பலப் பகுதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒன்றினைத்து இந்தியாவுடன் இணைத்ததால் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

அவரின் நினைவைப் போற்றும் வகையிலும் அவரது சேவைக்கான நினைவு கூறலாகவும் குஜராத்தில் உள்ள நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணையின் கரையில்  உள்ள சாதுபேட் என்ற இடத்தில் மறைந்த சர்தார் வல்லபாய் படேலுக்கு. 182 மீட்டர் உயரம் கொண்ட சிலை நிறுவப்பட்டுள்ள்து. இந்த சிலையின் சிறப்பு என்னவெனில் உலகிலேயே அதிக உயரம் கொண்ட அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, சீனாவின் புத்தர் சிலை ஆகியவற்றை விட உயரமானது. இந்த சிலையை உருவாக்க ரூ.2900 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான விமர்சனகங்களுக்கிடையில் இன்று பல தலைவர்கள் முன்னிலையில் இந்திய பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது.
webdunia

இதையடுத்து சிலையருகே மோடி நிற்பது போன்ற புகைப்படங்கள் டிவிட்டரில் உலாவர ஆரம்பித்தது. அதில் மோடி சிலையருகே நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி ‘அயன் மேனும் ஐரனி மேனும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது சர்தார் படேலை இரும்பு மனிதர் எனவும் மோடியை முரண்பட்ட மனிதர் (சொல்வது ஒன்று; செய்வது ஒன்று) எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலமாக அரசியல் சம்மந்தமாக பல சர்ச்சையான மற்றும் துணிச்சலான கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆத்தூருக்குப் போகாமல் பசும்பொன் போவதுதான் சமூகநீதியா? –ஸ்டாலினை விளாசிய சமூக ஆர்வலர்கள்