Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 82 ஆவது பிறந்தநாள்!

Advertiesment
மறைந்த இயக்குனர் பாலு மகேந்திராவின் 82 ஆவது பிறந்தநாள்!
, வியாழன், 20 மே 2021 (12:14 IST)
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா அவர்களின் 82 ஆவது பிறந்தநாள் இன்று நினைவுகூறப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய மூன்றாம் பிறை, வீடு மற்றும் சந்தியா ராகம் ஆகிய படங்கள் காலத்தால் அழியாதவை. அதுமட்டுமில்லாமல் அவரி இறப்புக்குப் பின்னர் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களாக இருக்கும் பாலா, வெற்றிமாறன், கற்றது தமிழ் ராம் மற்றும் சீனு ராமசாமி போன்ற எண்ணற்ற இயக்குனர்களை உருவாக்கியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். 2014 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக் அவர் இறந்தார். அவரின் மரணம் தமிழ் சினிமா கலைஞர்களில் அதிக மரியாதையுடன் நடந்த மரணங்களில் ஒன்றாக இருந்தது. அவர் இறப்புக்குப் பின்னர் அவர் பெயரில் நூலகங்கள், விருதுகள் என பல முன்னேற்பாடுகளை அவரின் உதவியாளர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவரின் 82 ஆவது பிறந்தநாள் சமூகவலைதளங்களில் நினைவு கூறப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த இடம் எடுப்பா தெரியது... பாரூ'வை Zoom செய்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!