Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கான் படத்தின் ரிலீஸுக்கு முன்பே வெளியான முதல் விமர்சனம்…!

vinoth
திங்கள், 29 ஜூலை 2024 (12:02 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. வசனங்கள் இன்றி விறுவிறுப்பான காட்சிகளோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த டீசர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த டீசர் இதுவரை 8 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வணங்கான் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை காட்டுகிறது. 

இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அதில் “வணங்கான்மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. பார்த்து நெகிழ்ந்தேன். பாலா அண்ணன் மறுபடியும் ஒரு சிறந்த படைப்பினை உருவாக்கித் தந்திருக்கிறார். லவ் யூ ணா!!. அருண்விஜய்யின் கடின உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.  ஒரு படைப்பை தங்கள் கடின உழைப்பின் மூலம் செதுக்கியுள்ள குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கிறோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments