Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் 'அயலான்' பட டிரெயிலர் ரிலீஸ் விழா

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (19:04 IST)
அயலான் திரைப்படத்தின் டிரெயிலர் வரும் ஜனவரி  5 ஆம் தேதி  துபாயில் நடைபெறவுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல  நடிகர் சிவகார்த்திகேயன்.  இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் அயலான்.

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து,  ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை  இயக்குனர் ரவிகுமார் இயக்கியுள்ளார்.   இப்படத்திற்கு பல பிரச்சனைகள் எழுந்த நிலையில், அவற்றைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த விழாவில்,  படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், அயலான் திரைப்படத்தின் டிரையிலர் வரும் ஜனவரி  5 ஆம் தேதி  துபாயில்  நடைபெறவுள்ளது.

இப்படம் வரும் பொங்கலுக்கு, லால் சலாம், கேப்டன் மில்லர் ஆகிய படங்களுக்குப் போட்டியாக ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments