Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரிலீஸ் ஆகாத அயலான் & கேப்டன் மில்லர்?

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரிலீஸ் ஆகாத அயலான் & கேப்டன் மில்லர்?
, திங்கள், 1 ஜனவரி 2024 (09:28 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு படங்களுக்கும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு நிலவும் நிலையில் அங்கு இந்த படங்கள் தமிழில் ரிலீஸாகும் அதே நாளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு மகேஷ்பாபு, ரவி தேஜா மற்றும் நாகார்ஜுனா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதால் போதுமான திரையரங்குகள் கிடைக்காத சூழலில் இந்த படங்கள் ரிலீஸாகாது என சொல்லப்படுகிறது. ஆனால் சங்கராந்தி முடிந்து சில வாரங்கள் கழித்து அயலான் மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முழுக்கதையும் பார்த்தால்தான் புரியும்… சலார் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிரசாந்த் நீல் பதில்!