சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் அயலான் திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினரோடு சிவகார்த்திகேயன் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த படம் தொடங்கப்பட்ட போதே அதன் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் தொலைக்காட்சிக்கு 20 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர். ஆனால் இத்தனை ஆண்டு தாமதத்தில் இப்போது சிவகார்த்திகேயன் படத்துக்கு சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை 40 கோடி ரூபாய்க்கு செல்லும் என்பதால் முன்னர் போட்ட உரிமையை மறுபரிசீலனை செய்ய சொல்லி சன் தொலைக்காட்சியிடம் அயலான் தயாரிப்பு தரப்பு கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு சன் டி வி தரப்பு என்ன பதில் சொல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.