Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட்லி இயக்கத்தில் அடுத்து நடிக்கப் போவது எந்த பேன் இந்தியா ஹீரோ?

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (07:31 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு கடந்த ஆண்டுபுனேவில் தொடங்கி நடந்தது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் தவிர அனைத்துக் காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இப்போது பட வேலைகள் முடியாததால் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அட்லி, அடுத்து விஜய் படத்தை இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க போவது உறுதியாகிவிட்ட நிலையில் யஷ் அல்லது அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த பேன் இந்தியா படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

மறுபடியும் பழைய சினிமாவை நோக்கி போயிட்டோம்! திரும்ப நடிக்க மாட்டேன்! - கமல்ஹாசன் ஓப்பன் டாக்!

'தேவரா' திரைப்படத்தில் இருந்து அனிருத் ரவிச்சந்தர் இசையில் முதல் சிங்கிள் 'ஃபியர்

’இந்தியன் 2’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி.. ஷங்கர் அறிவிப்பு.. சிங்கிள் பாடல் எப்போது?

அந்த ஆளே பண்ணியிருக்கார் நமக்கு என்னன்னு நினைச்சேன்!.. எம்.ஜி.ஆர் குறித்து ராதா ரவி கொடுத்த ஓப்பன் டாக்!.

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments