Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பிறந்தநாளில் தொடங்கும் தளபதி 68 படம்… அப்ப லியோ ஷூட்டிங் எப்ப முடியுது?

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (06:27 IST)
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இப்போது சென்னையில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஜூலை மாதத்துக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் படத்தில் மன்னா கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே போல வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படும் நிலையில் அடுத்த மாதம் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பூஜை தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. அதற்கு ஒரு வாரம் முன்பாக ஜூன் 15 ஆம் தேதி லியோ படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments