ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. அந்த படத்தின் வெற்றியால் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்த ஆர்யாவின் மார்க்கெட் ஏறியது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்போது முத்துராமலிங்கம் என்கிற காதர் பாட்ஷா மற்றும் மிஸ்டர் எக்ஸ் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள ஆர்யா இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் சார்பட்டா ஷூட்டிங் தொடங்கும் என அறிவித்துள்ளார். இதற்கிடையில் பா ரஞ்சித் கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.