Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளை முன்னிட்டு அருண்விஜய்க்கு படக்குழுவினர் அளித்த பரிசு!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:17 IST)
நடிகர் அருண் விஜய் நடிக்கும் சினம் படத்தின் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

நடிகர் அருண் விஜய்யின் தடம் படத்தின் வெற்றி அவர் மீது தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதையடுத்து அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் மாபியா திரைப்படம் வெளியான நிலையில் நீண்டகாலமாக பாக்ஸர் என்ற திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. அதே போல நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், அறிவழகன் இயக்கத்தில் பார்டர் மற்றும் தனது மாமா ஹரி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார். அதில் ஒரு படமாக ஜி என் ஆர் குமாரவேலன் இயக்கத்தில் நடித்து வரும் சினம் திரைப்படம் உள்ளது.

இந்த படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து ரிலிஸுக்காக தயாராக உள்ளது. இநிலையில் இன்று நடிகர் அருண்விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு படத்தின் போஸ்டர் ஒன்றை அவரின் பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments