Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹத் பாசிலை ஹீரோவாக்கி படம் இயக்கும் அரவிந்த் சாமி!

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2023 (07:47 IST)
90 களில் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோவாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. அவர் நடித்த ரோஜா, பம்பாய் ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் கவனம் பெற்றன.  ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு அவர் நடிப்பதை நிறுத்திக்கொண்டு வியாபாரத்தில் இறங்கினார்.

அதன் பிறகு கடல், தனி ஒருவன் மற்றும் போகன் ஆகிய படங்களின் மூலம் நடிகர் அரவிந்த் சாமி மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். இப்போது அவர் நடிப்பில் கள்ளபார்ட் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் ரிலிஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் அவதாரத்தை கையில் எடுக்க உள்ளார். விரைவில் அவர் இயக்கத்தில் பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் படம் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மணிரத்னம் தயாரித்த நவரசா திரைப்படத்தில் ‘கோபம்” என்ற அத்தியாயத்தை அரவிந்த் சாமி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை நானா?... ராஷ்மிகா அளித்த பதில்!

சல்மான் கான் படத்தை முடித்துவிட்டுதான் சிவகார்த்திகேயன் படம்… மும்பையில் முகாமிட்ட முருகதாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments