துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் துணிவு ரிலீஸுக்குப் பின் ஜனவரி 17 ஆம் தேதி இந்த படத்தை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தில் அஜித்தை தவிர மற்ற நடிகர் நடிகைகள் பற்றி எந்த விவரமும் வெளியாகவில்லை.
 
									
											
							                     
							
							
			        							
								
																	தற்போது பரவும் தகவலின் படி படத்தில் வில்லனாக நடிக்க அரவிந்த் சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அஜித்தும் அரவிந்த் சாமியும் பாசமலர்கள் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.