Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் பாட்டு கம்போஸ் பண்ணும்போதே தோனிக்கும்… அனிருத் பகிர்ந்த சுவையான தகவல்!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (09:33 IST)
ஐபிஎல் திருவிழா சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. அதில் பெங்களூரு அணி அபார வெற்றியைப் பெற்றது. அதையடுத்து மறுநாள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் நடக்கும் ஒவ்வொரு மைதானத்திலும் முதல் போட்டியின் போது கோலாகலமான இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னையில் நடந்த போட்டியின் போது இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவர் ஜெயிலர் படத்தின் ‘ஹுக்கூம்’ உள்ளிட்ட பாடல்களைப் பாடினார்.

இது குறித்துப் பேசியுள்ள அவர் “ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலை உருவாக்கும் போதே இது ரஜினி சாருக்குப் பொருந்துவது போல தோனிக்கும் பொருந்தவேண்டும் என்றுதான் வரிகளை எழுத சொன்னேன். சென்ற ஆண்டு தோனி மைதானத்துக்குள் வரும்போது அந்த பாடலை போட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments