Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி சார் உதவின்னு கேட்கும்போது எப்படி பண்ணாம இருக்க முடியும்- மோகன்லால் நெகிழ்ச்சி!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (08:46 IST)
ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையில் சமீபகாலத்தில் அமைந்த மிகப்பெரிய ஹிட் என்றால் அது ஜெயிலர் திரைப்படம்தான். நெல்சன் இயக்கத்தில் உருவான அந்த படம் சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதன் காரணமாக தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

முதல் பாகத்தின் வெற்றிக்கு மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ் குமார் ஆகியோரின் மிரட்டலான சிறப்புத் தோற்றங்களும் காரணமாக அமைந்தன.

இந்நிலையில் எம்புரான் படத்தின் ப்ரமோஷன் பணிகளுக்காக சென்னை வந்துள்ள மோகன்லால் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் “ஜெயிலர் படத்தில் நான் நடித்த மேத்யூ கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. அதில் நான் நடிக்காமல் வேறு ஒருவர் நடித்திருந்தாலும் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் அதில் நான்தான் நடிக்க வேண்டும் என, உதவி செய்ய வேண்டும் என ரஜினி சார் என்னைப் பார்க்க வந்தார். அப்படி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என்னிடம் உதவி என்று கேட்கும் போது நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்?” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அரங்கம் அதிரட்டுமே.. விசிலு பறக்கட்டுமே! "கூலி" திரைப்படத்தின் கொண்டாட்டம்

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்? சிங்கத்தின் ஆட்டம் விரைவில் என பதிவு..!

கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?

500 கோடி வசூலை குவித்த படத்தின் கதையை எழுதியது சாட்ஜிபிடியா? - ஆச்சர்ய தகவல்!

ஜொலிக்கும் கிளாமர் உடையில் பிரியங்கா மோகனின் ரீசண்ட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments