Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் கூட ரிலீஸ் செய்ய முடியாத அண்டாவ காணோம். என்ன தான் பிரச்சனை?

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (14:03 IST)
விஷால் நடித்த திமிரு என்ற படத்தில் நடித்தவரும் விஷாலின் அண்ணன் மனைவியுமான நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த ’அண்டாவ காணோம்’ திரைப்படம் ரிலீஸ் ஆவதாக கடந்த ஒருசில வருடங்களாக அவ்வப்போது கூறப்பட்டு வந்தது. ஆனால் திடீர் திடீரென ரிலீஸ் தேதிகள் தள்ளி போய்க்கொண்டே இருந்தது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் வேறு வழியின்றி ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் ’அண்டாவ காணோம்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட் திடீரென இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 28-ம் தேதியும் இந்த படம் ரிலீஸ் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் அவர்கள் தனது டுவிட்டரில் கூறிய போது ஒரு சில எதிர்பாராத காரணங்களால் மீண்டும் ’அண்டாவ காணோம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது விரைவில் புதிய தேதியை அறிவிப்போம் என்று கூறியுள்ளார்
 
ஓடிடியில் கூட ரிலீஸ் செய்ய முடியாத அளவிற்கு இந்த படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை இருக்கிறது என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments