தாமதமா வந்தாலும் தரமா இருக்கு... "அண்டாவ காணோம்" படத்தின் டீசர்!

சனி, 1 ஆகஸ்ட் 2020 (14:46 IST)
திமிரு, காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் விஷால் அண்ணனின் மனைவியுமான ஸ்ரேயா ரெட்டி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் ரீஎண்ட்ரி ஆகி நடித்துள்ள படம் "அண்டாவ காணோம்". வேல்மதி இயக்கியுள்ள இப்படத்திற்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டே வெளியாகவேண்டிய இப்படம் சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.  2016ம் ஆண்டே இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் தற்போது சுமார் 3 ஆண்டுகள் கழித்து இந்த படம் OTT தளத்தில் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புதிய டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். மேலும், விஜய் சேதுபத்தி இப்படத்தில் அண்டாவாக நடித்து அதற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். வித்தியாசமாக இருக்கும் இந்த கதை தாமதமாக வந்தாலும் தரமானதாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  


 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சாதனை படைத்த விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா பாடல்!