Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்மீகத்தில் ஆழமாக இறங்கும் அமலா பால்… வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (07:44 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.

இதையடுத்து இப்போது தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அவர் நடித்த கடாவர் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸாகி சிறிய அளவில் கவனம் பெற்றது.

சமீபகாலமாக அவர், ஆன்மிகத்தில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி புனித ஸ்தலங்களுக்கு சென்று அது சம்மந்தமான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது ருத்ராட்சை மாலைகளோடு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதே சுதந்திரம்… மற்றவர்களின் கருத்துக்கு எதற்குக் கவலை? –சமந்தா ஓபன் டாக்!

நா முத்துக்குமார் நினைவு இசை நிகழ்ச்சியில் கமல் முதல் தனுஷ்வரை… திரைத்துறையினரின் பட்டியல் வெளியீடு!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் கதாநாயகியாக இணைந்த ருக்மிணி வசந்த்!

புதிய வடிவத்தில் மீண்டும் ரிலீஸாகும் ‘அஞ்சான்’… இயக்குனர் லிங்குசாமியின் நம்பிக்கை வெற்றி பெறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments