Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தேசிய விருதை வாங்கவேண்டும் என முடிவெடுத்தது அந்தக் காரணத்துக்காகதான் – அல்லு அர்ஜுன் பெருமிதம்!

vinoth
செவ்வாய், 12 நவம்பர் 2024 (09:06 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

புஷ்பா 1 படத்துக்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் இருந்து அந்த விருதைப் பெற்ற முதல் நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். தேசிய விருது குறித்து பேசிய அல்லு அர்ஜுன் “நான் தேசிய விருது பெற்ற நடிகர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒருவர் கூட தெலுங்கு சினிமாவில் இருந்து வரவில்லை. அப்போதுதான் நான் தேசிய விருது வாங்கவேண்டும் என்ற முடிவை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் புகைப்படத் தொகுப்பு!

கிளாமரான லுக்கில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஓடிடியிலாவது கவனம் பெறுமா ஆர் ஜே பாலாஜியின் ‘சொர்க்க வாசல்’?

சோஷியல் மீடியாவில் வைரலான வார்த்தையை விடாமுயற்சி பாடலில் சொருகிய அனிருத்!

ஆர் ஆர் ஆர் உருவானது எப்படி?.. நெட்பிளிக்ஸில் வெளியான மேக்கிங் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments