Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புஷ்பா-னா இனிமேல் ‘Free’ Fire! இளசுகளையும் ஈர்க்கும் வகையில் பக்கா ப்ளான்!

Advertiesment
Pushpa 2

Prasanth Karthick

, திங்கள், 11 நவம்பர் 2024 (12:10 IST)

அல்லு அர்ஜுன் நடித்து வெளியாகவிருக்கும் ‘புஷ்பா-2’ படத்தை ப்ரொமோட் செய்ய Free Fire நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு

 

 

அல்லு அர்ஜூன் நடித்து சுகுமார் இயக்கத்தில் வெளியாகி இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாவது பாகம் Pushpa 2: The Rule டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாகவே களைகட்டி வருகிறது.

 

சமீபமாக திரைப்படங்களை ப்ரோமோட் செய்ய பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஆடியோ வெளியீடு போன்றவற்றை தாண்டி இன்ஸ்டாகிராம் பிரபலங்கள், யூட்யூப் பிரபலங்கள் மூலமாக ப்ரோமோட் செய்யும் முறையையும் பல படத்தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

 

ஆனால் புஷ்பா படக்குழு மேலும் ஒருபடி மேலே சென்று இளைஞர்களை பெரிதும் கவர்ந்த ஆன்லைன் கேமான Free Fireஉடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி Free Fire கேமில் புஷ்பா படத்தில் உள்ள வாகனங்கள், ஆயுதங்கள், Skin Pack போன்றவற்றை பயன்படுத்த முடியும். இதனால் இளைஞர்கள், சிறுவர்கள் இடையே புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷ்ஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் இணைந்த ஜான் விக் பட ஸ்டண்ட் இயக்குனர்!