Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புஷ்பா 2 டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Advertiesment
புஷ்பா 2 டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

vinoth

, செவ்வாய், 12 நவம்பர் 2024 (08:51 IST)
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இந்த படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். தற்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் படத்தின் டிரைலர் நவம்பர் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிட கூடாது: நீதிமன்றம் உத்தரவு..!