Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல கோடி ரூபாய் வருமானம்…. ஆனாலும் விளம்பரத்தி நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்?

பல கோடி ரூபாய் வருமானம்…. ஆனாலும் விளம்பரத்தி நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்?
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:36 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் வெற்றி இந்தியா முழுவதும் அறிந்த நடிகராக அவரை ஆக்கியுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரிய அளவில் பேசப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா the Rule உருவாக உள்ளது.  புஷ்பா படத்தின் மூலம் இன்று இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாகியுள்ள அல்லு அர்ஜுனை தேடி பல விளம்பர பட வாய்ப்புகள் வருகின்றனவாம். அப்படி சமீபத்தில் புகையிலை சம்மந்தபட்ட ஒரு நிறுவனம் அவரை அணுக, பல கோடி ரூபாய் சம்பளம் தருவதாகவும் சொல்லியும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம் அல்லு அர்ஜுன்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருண் ராஜா காமராஜா இயக்கத்தில் அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்கள்… செம்ம line up!