நடிகர் அஜித் குமார் ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இப்போது வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலிஸூக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் அவரின் அடுத்த படம் பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன. ஆனால் இப்போது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் அஜித் தன் உடல் நிலையை முறையாக பேணுவதற்காக ஒரு வருடம் கால சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துகொள்ளலாமா என யோசித்து வருகிறாராம். இந்த செய்தியின் உண்மைத்தன்மை பற்றிய தகவல் தெரியவில்லை.