Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் விடாமுயற்சியில் இவர்தான் ஹீரோயின்… இன்னும் சில நாட்களில் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 29 மே 2023 (06:47 IST)
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மே 1 ஆம் தேதி விடா முயற்சி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த டைட்டில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொண்டது.

இந்நிலையில் திரைக்கதை வேலைகள் முடிந்த நிலையில் இப்போது படத்துக்கான லொக்கேஷன் தேடுதல் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு உள்ளிட்ட்ட பணிகளில் இயக்குனர் மகிழ் திருமேனி இறங்கியுள்ளாராம். 

இன்னும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படாதது அஜித் ரசிகர்களுக்கு அதிருப்தியின்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோயினாக திரிஷா நடிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வேட்டையன்’ படத்தின் ரித்திகா சிங் கேரக்டர் இதுதான்: வீடியோ வெளியிட்ட லைகா..!

ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டாரா ஜானி மாஸ்டர்.. பவன் கல்யாண் அதிரடி அறிவிப்பு..!

"மூக்குத்தி அம்மன் 2" படத்தின் இயக்குனர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சமந்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் ஃபோட்டோ ஆல்பம்!

கிளாமரான உடையில் பீச்சில் போட்டோஷூட் நடத்திய ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments