துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. மே 1 ஆம் தேதி விடா முயற்சி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த டைட்டில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருசேர எதிர்கொண்டது.
இந்நிலையில் திரைக்கதை வேலைகள் முடிந்த நிலையில் இப்போது படத்துக்கான லொக்கேஷன் தேடுதல் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு உள்ளிட்ட்ட பணிகளில் இயக்குனர் மகிழ் திருமேனி இறங்கியுள்ளாராம். இதனால் விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது.
இந்நிலையில் இந்த மாதமே தொடங்கி இருக்க வேண்டிய விடாமுயற்சி ஷூட்டிங் லைகா நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறையின் ரெய்டு காரணமாக ஷூட்டிங் தொடங்குவதில் தாமதமாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.