Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்துள்ளது: இசைஞானி இளையராஜா

Webdunia
ஞாயிறு, 28 மே 2023 (07:45 IST)
செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்துள்ளது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார். 
 
இன்று புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்படவிருக்கும் நிலையில் நேற்று தர்மபுரி ஆதீனம் செங்கோலை பிரதமர் மோடி இடம் அளித்தார். இதுகுறித்து இசைஞானி இளையராஜா தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு தனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்
 
ஒரு குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று கூறிய இளையராஜா குறுகிய காலத்தில் கட்டி  முடிக்க துணை புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 
 
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவை கொண்டாடி வருகிறது என்று கூறிய இளையராஜா இந்த தருணத்தில் புதிய கொள்கைகள் முடிவு எடுப்பதற்காக இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதற்கு நான் மனமார பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார் 
 
செங்கோல் என்பது பழங்கால தமிழர்களின் கலாச்சார மற்றும் பெருமை என்று கூறிய இளையராஜா அரச குடும்பத்தினர் செங்கோலை ஏந்தி வெற்றிகரமான ஆட்சி செய்தனர் என்றும் நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர் என்றும் கூறினார். இத்தகைய செங்கோல் தற்போது சரியான இடத்திற்கு திரும்ப வந்திருப்பது தனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments