Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணிவு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம்… அஜித் கொடுத்த ஐடியா!

துணிவு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதம்… அஜித் கொடுத்த ஐடியா!
, செவ்வாய், 15 நவம்பர் 2022 (09:10 IST)
அஜித்தின் துணிவு படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை சமீபத்தில் சென்னையில் படமாக்கினர். நடன இயக்குனர் கல்யாண், இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த பாடலை படமாக்கி வருகின்றனர்.

படத்தின் கதைப்படி சென்னையின் மையமான மவுண்ட் ரோட் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை அடிப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம். அதனால் நிறைய கிராபிக்ஸ் பணிகள் உள்ளதால், பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவடையுமா என்ற சந்தேகம் படக்குழுவுக்கே எழுந்துள்ளதாம்.

ஆனால் இதைக் கேட்ட அஜித், படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதனால் கிராபிக்ஸ் காட்சிகளை  ஒரே நிறுவனத்துக்குக் கொடுக்காமல் நான்கைந்து நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுங்கள் என கூறியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் போல நடிப்புக்கு பிரேக் விட போகும் அமீர்கான்… அவரே சொன்ன காரணம்!