Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (11:29 IST)
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மினி ஸ்டூடியோ மற்றும் சிக்ஸர் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் பிளான் பி. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் வெளியிட்டார்.

படத்துக்குப் பின்னர் பெயர் ’திட்டம் இரண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இப்போது இந்த படம் ஓடிடிக்கு சென்றுள்ளது.

சோனி லைவ் ஓடிடி தளம் வரிசையாக படங்களை வாங்கி வெளியிட்டு வரும் நிலையில் இப்போது ஜூலை 30 ஆம் தேதி ரிலிஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments