Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி

நடன இயக்குனரை மணந்தார் நடிகை சாந்தினி
, வியாழன், 13 டிசம்பர் 2018 (10:57 IST)
நடிகை சாந்தினி, நடன இயக்குனர் நந்தா ஜோடிக்கு நேற்று திருப்பதியில் வெகுவிமரிசையாக திருமணம் நடந்தது.
பாக்யராஜ் மகன் சாந்துனுவுக்கு ஜோடியாக ‘சித்து பிளஸ் 2’ என்ற படத்தில் அறிமுகமானவர் சாந்தினி. இவர் தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் குறிப்பாக வில் அம்பு, கட்டாப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, வண்டி ஆகிய  படங்களில் நடித்துள்ளார்.
 
சாந்தினி, தன்னுடன் வில் அம்பு படத்தில்  பணியாற்றிய நந்தா என்ற நடன இயக்குனரை காதலித்தார். இவர் மாலைப்பொழுதின்  மயக்கத்திலே, வில் அம்பு, பியார் பிரேமா காதல், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். 9  வருடங்களாக காதலித்து வந்த, இவர்கள் இருவரும் தங்கள் காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்துக்கு சம்மதம் கேட்டனர், இவர்களது  பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
 
இதைத்தொடர்ந்து சாந்தினி–நந்தா திருமணம் திருப்பதி கோவிலில் நேற்று இனிதே நடந்தது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 16–ந்தேதி சென்னையில்  நடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1 மணி நேர இச்சைக்கு ரூ.2 லட்சம்: பிரபல நடிகைக்கு ஆபாச அழைப்பு