பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.
இந்நிலையில் இவர் இப்போது தென்னிந்திய மொழிகளில் அதிகளவில் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார். அந்த வகையில் நானியோடு ஒரு படம் மற்றும் விஜய் தேவரகொண்டாவோடு ஒரு படம் என கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் சீதாராமம் என்ற ஒரே ஒரு ஹிட் மட்டுமே கொடுத்துள்ள அவரின் சம்பளம் கோடிகளில் செல்கிறதாம். நானி படத்துக்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக பெற்ற அவர் , விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க 3.5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். அவரின் சம்பள விவரம் தென்னிந்திய சினிமாவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.