Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிப்பட்ட காரணங்களால் இத்தனை ஆண்டுகளாக நடிக்கவில்லை.. ரீ எண்ட்ரி குறித்து பேசிய மீரா ஜாஸ்மின்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (08:30 IST)
தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் மீரா ஜாஸ்மின். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடி வருகிறார். அதற்காக இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மாதவன், சித்தார்த் மற்றும் நயன்தாரா நடிக்கும் டெஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்துள்ளார் மீரா ஜாஸ்மின். இந்த படம் பற்றி பேசிய அவர் ”ரன் மற்றும் ஆயுத எழுத்து படத்தில் மாதவனோடு இணைந்து நடித்துள்ளேன். இப்போது அவருடன் டெஸ்ட் படத்தில் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. இடையில் சில ஆண்டுகள் தனிப்பட்ட காரணங்களால் நடிக்காமல் இருந்தேன். ஆனால் இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளேன்.” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

கைகொடுக்காத நடிப்பு… மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கும் பிரபுதேவா!

வியாபாரத்தைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படத் தயாரிப்பாளர்… வெளிநாட்டு உரிமை இத்தனைக் கோடியா?

ஷங்கர் லைகா பிரச்சனை தீர காரணமாக இருந்த கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்