Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரிடம் இருந்து விவாகரத்தா?... நடிகை அசின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Advertiesment
கணவரிடம் இருந்து விவாகரத்தா?... நடிகை அசின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
, புதன், 28 ஜூன் 2023 (14:00 IST)
நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே இந்தியில் உருவான கஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்து பாலிவுட்டிலேயே முகாமிட்டார். ஸ்ரீதேவி போல ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அசினுக்கு இப்போது அரின் என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அசின் தனது கணவர் ராகுல் ஷர்மாவை விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் பரவி வந்தன. அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் அவர் தனது கணவர் சம்மந்தப்பட்ட படங்களை நீக்கியதுதான்.

ஆனால் இப்போது மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது கணவரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “எங்கள் விடுமுறை நாளில் அருகருகே அமர்ந்து எங்கள் காலை உணவை உண்டுகொண்டே கற்பனையான் அடிப்படை உண்மையற்ற செய்தியை படித்துக் கொண்டிருக்கிறோம். விடுமுறை நாளில் இதைப் படித்ததன் மூலம் அற்புதமான 5 நிமிடத்தை இழந்திருக்கிறோம்.  உங்கள் நாள் சிறப்பாக அமையட்டும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!