Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, புதன், 28 ஜூன் 2023 (13:53 IST)
இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்தாலும் சில பல காரணங்களால் ரிலீஸ் தாமதமாகி வந்தது.

இடையில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாகியது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் ஜூலை 21 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிலீஸான விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன், ரத்தம் ,கொலை, ஹிட்லர் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.
 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸூக்கு முன்பே மாமன்னன் படத்தைப் பார்த்து பாராட்டிய தனுஷ்!