Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் திருமணம் செய்ய உள்ள ’சொப்பன சுந்தரி’

Advertiesment
காதல் திருமணம் செய்ய உள்ள  ’சொப்பன சுந்தரி’
, வியாழன், 22 டிசம்பர் 2016 (15:39 IST)
நடிகை மனிஷா யாதவ் தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வசப்பட்டுள்ளார் என்றும், விரைவில் அவர் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
வழக்கு எண் 18/9 என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன் பின் அவர் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் வெளியான சென்னை 28, இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலில் நடனமாடினார். 
 
தற்போது அவர் பெங்களூரை சேர்ந்த ஒரு தொழில் அதிபருடன் காதல் வயப்பட்டிருப்பதாகவும், அடுத்த வருடம் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும், அதன் காரணமாக தற்போது திரைப்படங்களில் நடிக்காமல் அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

webdunia


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் அடுத்த போலீஸ் அவதாரம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’