Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவேக் காமெடி செய்தது சிவசங்கர் பாபாவை வைத்துதானா?

Advertiesment
விவேக் காமெடி செய்தது சிவசங்கர் பாபாவை வைத்துதானா?
, வியாழன், 17 ஜூன் 2021 (08:31 IST)
பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டில் சிக்கி கைதாகியுள்ள சிவசங்கர் பாபாவை பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சுஷில் ஹரி பள்ளியைநடத்திவரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் அடைந்தனர் இதனையடுத்து அவர் டெல்லியில் இன்று காலை கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்ல சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர் இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு சிவசங்கர் பாபா தமிழ் நாட்டுக்கு அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. விரைவில் அவர் தமிழ்நாட்டுக்கு வர உள்ளார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மற்றொரு சாமியாரான யாகவா முனிவரோடு சன் தொலைக்காட்சியில் 1997 ஆம் ஆண்டு விவாதத்தில் சண்டை போட்டது பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இந்த வீடியோவை கலாய்த்துதான் விவேக் பாளையத்து அம்மன் படத்தில் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகளை வைத்தாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்!