எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

Siva
ஞாயிறு, 19 அக்டோபர் 2025 (14:38 IST)
நடிகர் விஷால் விருதுகள் வழங்கும் நடைமுறையே "பைத்தியக்காரத்தனம்" என்று கடுமையாக சாடியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
"விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான்கு பேர் ஒரு அறையில் அமர்ந்துகொண்டு, ஏழு கோடி மக்களுக்கு பிடித்த விஷயங்களை எது என்று தீர்மானிக்கிறார்கள். அப்படி சொல்வதற்கு அவர்கள் என்ன பெரிய மேதாவிகளா?
 
இதில் நான் தேசிய விருதையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். விருதுகளுக்கு கமிட்டிகள் உள்ளன. ஆனால், உண்மையான மதிப்பீட்டிற்குக் மக்கள் மத்தியில் சர்வே எடுக்கப்பட வேண்டும்
 
ஒருவேளை எனக்கு விருது அறிவிக்கப்பட்டால், நான் அந்த விருதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன். அது தங்கமாக இருந்தால், அதை விற்று அன்னதானத்திற்கு கொடுத்துவிடுவேன்."
 
"எனக்கு விருது கொடுத்துவிடாதீர்கள். அதற்கு தகுதியான மற்ற சிறந்த கலைஞர்களுக்குக் கொடுங்கள்" என்று தான் சொல்லிவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments