Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லை: சூரி

Advertiesment
உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லை: சூரி
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (20:47 IST)
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத திரையுலகினரே இல்லை என்று கூறலாம் 
 
அந்த வகையில் சற்று முன் நடிகர் சூரி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் குணமாக மதுரை மீனாட்சியை வேண்டிக் கொள்வதாக ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
 
விவரம் தெரிஞ்சு, உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லை!! விடியக்கால நடந்தாலும் சரி,
வீட்ல விசேஷம்னாலும் சரி, தாலாட்டி எங்கள தூங்க வைக்கறதும் சரி, தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி, எப்பவுமே உங்க பாட்டுத்தான்!!!
 
எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடனும், உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்க ஓடனும்ன்னு ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்..சார்.
 
இவ்வாறு நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலாபாலின் ஆடை குறைவான போஸ்: இணைய தளங்களில் வைரல்