Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கை, கால் எல்லாம் நல்லா தான இருக்கு: அப்புறம் ஏன் இந்த பொழப்பு? நடிகையை விளாசிய பிரபல நடிகர்!!!

கை, கால் எல்லாம் நல்லா தான இருக்கு: அப்புறம் ஏன் இந்த பொழப்பு? நடிகையை விளாசிய பிரபல நடிகர்!!!
, செவ்வாய், 26 மார்ச் 2019 (09:20 IST)
உடலில் ஊனம் உள்ளவர்களே தங்களை பார்த்துக் கொள்ளும் போது கை, கால்கள் எல்லாம் நன்றாக தானே இருக்கிறது என நடிகை விஜயலட்சுமியை பிரபல நடிகர் சிவராஜ்குமார் விளாசியுள்ளார்.
தமிழில் பல படங்களில் நடித்து பேமசானவர் தான் நடிகை விஜயலட்சுமி. பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்துள்ளார். அதுபோக கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
 
சமீப காலமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருறார். சிகிச்சைக்கு உதவும்படி திரையுலகத்தினரிடம் உதவியும் கேட்டு வருகிறார். உதவி செய்கிறேன் என கூறிக்கொண்டு கன்னட நடிகர் ரவி பிரகாஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பைக் கிளப்பினார்.
webdunia
இதற்கிடையே சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோர் தனக்கு உதவி செய்யவில்லை என விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவராஜ்குமார் விஜயலட்சுமிக்கு தொடர்ந்து உதவி செய்து கொண்டே இருக்க முடியாது. உடலில் ஊனம் உள்ளவர்களே தங்களை பார்த்துக் கொள்ளும் போது அவருக்கு கை, கால்கள் எல்லாம் நன்றாக தானே இருக்கிறது. அப்படியிருக்க ஏன் அவர் இப்படி புலம்புகிறார் என சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராதாரவிக்கு மாத்திரையும் பாப்கார்னும் தருகிறேன்: சமந்தாவின் கிண்டல் டுவீட்