Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவினுக்கு வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா? லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (07:23 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து சமீபத்தில் அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் கவின் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதையடுத்து கவின் நடிக்கும் படத்தை அறிமுக இயக்குனர் சிவா இயக்க அந்த படத்தை தயாரிக்க உள்ளார் நெல்சன். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில், இப்போது படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments