புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், என்.ஜி.கே. போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் செல்வராகவன்.
இவரது இயக்கத்தில் எச்.ஜே., சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை படமும், சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி படமும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யாரும் எதிர்ப்பார்க்காத சூழலில் தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
இயக்குநர் அருண்மாதேஷ் இயக்கத்தில் சாணிக் காயிதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.