Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசை நிகழ்ச்சி குளறுபடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை: ACTC நிறுவனர்

Advertiesment
இசை நிகழ்ச்சி குளறுபடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை:  ACTC நிறுவனர்
, புதன், 13 செப்டம்பர் 2023 (10:35 IST)
சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய ACTC என்ற நிறுவனத்தின் நிறுவனர் தெரிவித்துள்ளார் 
 
மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில் அதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏ ஆர் ரஹ்மானுக்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டது என்பதும் சமூக வலைதளங்களில் அவர் மீது கடுமையான விமர்சனம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும் இதற்கு முழுக்க முழுக்க நாங்களே பொறுப்பேற்று கொள்கிறோம் என்றும் ACTC நிறுவனர் ஹேமந்த் தெரிவித்துள்ளார். 
 
இசை நிகழ்ச்சியை நடத்தி கொடுப்பது மட்டுமே அவருடைய வேலை என்றும் அதை அவர் சிறப்பாகவே செய்தார் என்றும் அதனால் தயவு செய்து அவரை தாக்கி பதிவு செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்தார். டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியை காண முடியாத அனைவருக்கும் நிச்சயம் பணம் திருப்பி  அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!