ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்திருந்தார்.
அதில், ''நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிக்கு பொறுப்பேற்க்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனை அடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரம் மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் விழித்துக் கொள்ள இன்று நான் பலிகடா ஆகிவிட்டேன்' என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று இரவுக்குள் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிக்கு காரணம் தெரிவிக்கப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்ற நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள், நடந்தது என்ன என்பது குறித்து, இன்றிரவுக்குள் விளக்கம் அளிக்கப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.