Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர் கே ஜி ஜார்ஜ் மரணம்!

மலையாள சினிமாவின் மூத்த இயக்குனர் கே ஜி ஜார்ஜ் மரணம்!
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:32 IST)
மலையாள சினிமாவின் மூத்த இயக்குனரும் தேசிய விருது வென்ற இயக்குனருமான கே ஜி ஜார்ஜ் நேற்று கொச்சியில் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 77. சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார் அவர். அவரது மரணத்தை அடுத்து சக கலைஞர்களும், சினிமா ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புனே திரைப்பட கல்லூரியில் டிப்ளமோ முடித்து கேரள சினிமாவில் நுழைந்த ஜார்ஜ், 1975 ஆம் ஆண்டு அவருடைய முதல் படமான ஸ்வப்னதானம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்துக்கு சிறந்த மலையாள படத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

அதன் பின்னர் அவரின்  ‘ஊழ்க்கடல்’ (1979), ‘மேளா (1980), ‘யவனிகா’ (1982), ’லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக்’ (1983)  உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தன. இதில் லேகாயுடே மரணம்- ஒரு பிளாஷ்பேக் எனும் திரைப்படம் மறைந்த நடிகை ஷோபாவின் மரணத்தை தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!