Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (07:24 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ், சம்யுக்தா மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான திரைப்படம் வாத்தி. இந்த படத்தை தெலுங்கு இயக்குனரான வெங்கட் அட்லூரி இயக்கி இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இந்த படம் வசூலில் குறைவைக்கவில்லை.

இதையடுத்து வெங்கட் இயக்கும் அடுத்த பேன் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு ஹைதராபாத்தில் தொடங்கியது. படத்தில் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை நவின் நூலி மேற்கொள்கிறார். விரைவில் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயம் ரவி வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த விஜய் சேதுபதி… அவரே சொன்ன காரணம்!