Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்யாவைப் பற்றி ஹீரோயின் சயிஷா என்ன சொன்னார் தெரியுமா?

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (10:13 IST)
ஆர்யா ஜோடியாக நடித்துள்ள சயிஷா, அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
‘ஹர ஹர மஹாதேவஹி’ புகழ் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிவரும் படம் ‘கஜினிகாந்த்’. இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோயினாக நடிக்க, ‘வனமகன்’ சயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
 
‘கஜினிகாந்த்’ பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சயிஷா, “வனமகன் படத்தில் என்னுடைய திறமையைப் பார்த்து இந்த வாய்ப்பு கொடுத்த ஞானவேல் ராஜா சாருக்கு நன்றி. படம் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து முதலில் பேசியவர் அவர். இதுவரை நான் பணியாற்றிய சிறந்த இயக்குநர்களில் சந்தோஷும் ஒருவர்.
 
சந்தோஷின் நல்ல மனசைப் போலவே படமும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொருவரிடமும் எப்படி வேலை வாங்க வேண்டும் என அவருக்குத்  தெரிந்திருக்கிறது. ஆர்யாவுடன் பணியாற்றுவது கூலான விஷயம். இந்த பேனரில் இன்னும் நிறைய படம் பண்ண ஆசைப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் தூக்கலாக யாஷிகா ஆனந்த் கொடுத்த போஸ்… கலர்ஃபுல் போட்டோஸ்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஸ்!

ஷங்கரை அடுத்து அல்போன்ஸ் புத்ரனுக்குக் கதை கொடுக்கும் கார்த்திக் சுப்பராஜ்!

சூர்யாவுக்கு சொன்ன கதையை அமீர்கானை வைத்து இயக்குகிறாரா லோகேஷ்?

தள்ளிப் போகும் பிரேமலு 2 ஷூட்டிங்… ரிலீஸ் திட்டம் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments