Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ஒரே இடத்தில் 4 விழாக்களை நடத்திய ஞானவேல்ராஜா

Advertiesment
ஒரே நாளில் ஒரே இடத்தில் 4 விழாக்களை நடத்திய ஞானவேல்ராஜா
, புதன், 17 ஜனவரி 2018 (23:20 IST)
ஒரு படத்தின் வெற்றி விழா, ஒரு படத்தின் சிங்கிள் வெளியீட்டு விழா, ஒரு படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீட்டு விழா, ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா என ஒரே நாளில் ஒரே இடத்தில் நான்கு விழாக்களை நடத்தி கோலிவுட் திரையுலகினர்களை அசத்தியுள்ளார் ஸ்டுடியோக்ரீன் நிறுவனர் ஞானவேல்ராஜா

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் பொங்கல் விருந்தாக வெளிவந்த  சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றிவிழா, அவரது தயாரிப்பில் உருவாகி வரும் ஆர்யாவின் ''கஜினிகாந்த்' படத்தின் சிங்கிள் வெளியீட்டு விழா, ஞானவேல்ராஜா தயாரிக்கும் இன்னொரு படமான கவுதம் கார்த்திக்கின் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' படத்தின் 2வது சிங்கிள் வெளியீட்டு விழா மற்றும் ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடும் அனுஷ்காவின் 'பாகமதி' படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா என நான்கு விழாக்கள் இன்று சென்னை வடபழனியில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நடந்தது

இந்த விழாவில் சூர்யா, ஆர்யா, அனுஷ்கா, கவுதம் கார்த்திக் உள்பட நான்கு படக்குழுவினர்களும் கலந்து கொண்டதால் விழா கோலகலமாக நடந்தது. கோலிவுட்டில் ஒரே இடத்தில் நான்கு படங்களின் விழாக்கள் நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போட்டி போடும் 2 இயக்குனர்கள்