Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் எனது நண்பர் மட்டுமே, அவருடன் திருமணம் இல்லை: அனுஷ்கா

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (06:49 IST)
பாகுபலி மற்றும் பாகுபலி 2' படங்களில் இணைந்து நடித்த பிரபாஸ்-அனுஷ்கா, திரையில் ராசியான ஜோடி என்ற பெயரை எடுத்த நிலையில் வாழ்க்கையிலும் இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளிவந்தது

இந்த நிலையில் தனது திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று நடைபெற்ற 'பாகமதி' இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்கா தெரிவித்தார். பிரபாஸ் தனது நண்பர் மட்டுமே என்றும் அவருடன் திருமணம் இல்லை என்றும் அவர் உறுதிபட கூறினார். பிரபாசுடன் காதல் மற்றும் திருமணம் என்று வெளியாகி வரும் செய்தியில் உண்மை இல்லை என்றும் அவர் கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்

மேலும் அவர் தனது திருமணம் குறித்து கூறியபோது, 'எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலிலும் உண்மை இல்லை. முதலில், நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்கு பிடித்தால், உடனே திருமணம்தான். நண்பர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்கள் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments