கூலி படத்தில் என் வேலை அதுமட்டும்தான்… எனக்கு எந்த வருத்தமும் இல்லை –அமீர்கான்!

vinoth
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (14:37 IST)
தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்தைய சென்சேஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய ‘கூலி’ படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவுக்கு ‘பில்டப்’ கொடுக்கப்பட்டு ரிலீஸான நிலையில் படம் வெளியான முதல் காட்சியில் இருந்தேக் கலவையான விமர்சனங்களைப் பெறத் தொடங்கிவிட்டது. விமர்சனங்கள் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றுதான் சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி 6 நாட்களில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த படத்தில் அமீர்கான் ‘தாஹா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விக்ரம் படத்தின் ரோலக்ஸ் போல அது தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்த்திருந்த படக்குழுவினருக்கு ஏமாற்றத்தையேத் தந்தது. ஏனென்றால் அந்த கதாபாத்திரத்துக்குக் கதையில் எந்த தேவையும் இல்லை, வெறுமனே வணிக நோக்கத்துக்காக மட்டுமே வைக்கபட்டிருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அமீர்கானின் வட இந்திய ரசிகர்கள் ஏன் இந்த படத்தில் அவர் நடித்தார் என்றெல்லாம் புலம்பினார்கள்.

இந்நிலையில் கூலி படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ள அமீர்கான் “படத்தில் எனது வேலை ரஜினி சாருக்கு பீடி பற்றவைப்பது மட்டும்தான். அதை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். அவருடன் நடிப்பது என்பது பெருமை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments