Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொரு சீனும் சிக்ஸர்… துணிவு பார்த்த பிரபல இயக்குனர் ட்வீட்!

Advertiesment
ஒவ்வொரு சீனும் சிக்ஸர்… துணிவு பார்த்த பிரபல இயக்குனர் ட்வீட்!
, புதன், 11 ஜனவரி 2023 (15:15 IST)
அஜித்தின் துணிவு திரைப்படம் இன்று அதிகாலை 1 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆரவாரமான வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் துணிவு திரைப்படம் ஓடும் திரைகளில் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் கூடி கொண்டாடி மகிழ்ந்து படத்தைப் பார்த்து வருகின்றனர்.

ரசிகர்களோடு பல திரையுலக பிரபலங்களும் துணிவு படத்தை பார்த்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் படம் பார்த்த இயக்குனரும் நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய ட்வீட்டில் படத்தை பாராட்டியுள்ளார்.

அவரது பதிவில் “பிளாக்பஸ்டர். என்னவொரு பர்ஃபாமன்ஸ். என்னவொரு கரிஸ்மா.. ஒவ்வொரு சீனும் சிக்ஸர். இயக்குனர் வினோத் சார் மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணிவு & வாரிசு திரைப்படத்தோடு வெளியான சாந்தனுவின் ராவண கோட்டம் டிரைலர்!