Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உருவாகிறது விஷால் &ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி!

Advertiesment
உருவாகிறது விஷால் &ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி!
, செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (10:52 IST)
விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களின் மூலம் பி கிரேட் இயக்குனர் என்ற இமேஜைக் கொண்டிருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார். அதன் பின்னர் இப்போது காதலை தேடி நித்யானந்தா மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த பின்னர் தனது எண்ண ஓட்டமே மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு எனது கதை தேர்வு வேறு ஒரு தளத்தில் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் தனது 18+ பாதையை மாற்றிக்கொண்டு கமர்ஷியலாக படங்கள் இயக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதையடுத்து இப்போது விஷாலோடு ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன்… மற்ற மொழிகளில் இதுதான் தலைப்பு!